There is requirement at fidelity for Freshers( 0-1 Exp).
29 Jan
வீபி ஸ்கிப்ட் மூலம் ஒரு கோப்பை திறப்பது எப்படி? How to open a file using VBScript?
VB Script(vbs) மூலம் ஒரு கோப்பை(file) திறப்பது எப்படி?
.vbs என சேமிக்கப்பட்ட கோப்பானது கிட்டத்தட்ட ஒரு EXE பைலை போல் வேலை செய்யும். இதில் நாம் vbscriptமூலம் கோடிங் செய்ய வேண்டும்.
கோப்பை திறப்பதற்கான வழிமுறைகள்:
1. நோட்பேட்(Notepad) அல்லது ஏதாவது ஒரு எடிட்டரை(Editplus, Textpad etc) ஒப்பன் செய்யவும்
2.கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்யவும்.
3.ஃபைலை openfile.vbsஎன செய்யவும்.
4. openfile.vbsயை double click செய்தால் தேவையான கோப்பு திறக்கும்.(eg:C:\testfolder\testfile.txt)
Coding:
Dim shell
Set shell = CreateObject(“WScript.Shell”)
shell.Run Chr(34) & “C:\testfolder\testfile.txt” & Chr(34), 1, false
Set shell = Nothing
For more information:
http://customerfx.com/pages/crmdeveloper/2004/02/10/how-to-execute-a-file-program-in-vbscript.aspx
- nascle Guru
4 Jan
Nascle Guide For Freshers – நேஷ்கில் வழிகாட்டி
சாப்வேர் இன்ஞினியர், லீட் என்ஞியர், ப்ராஜெக்ட் லீட், ப்ராஜெக்ட் மேனேஜர், ஜெனரல் மேனேஜர், வைஸ் பிரசிடென்ட், பிரசிடென்ட், சிஈஓ என எந்த பதவிகளில் இருப்பவராயினும் ஒரு காலத்தில் அவர்களும் ஃப்ரெஸ்சர் ஆக இருந்தவர்கள்தான் (இதை தான் தமிழ் சமூகம் மாமியாரே நீங்களும் ஒரு மருமகள்தான் என்று சொல்கிறது) இதையே ஆங்கிலத்தில் என்கிறார்கள்.தமிழ், ஆங்கிலம் என எதில் சொன்னாலும் விஷயம் ஒன்றுதான் என்றாலும், இங்கிலீசில் இரண்டு வார்த்தையை போடுவது ஒரு கெத்துக்காகத்தான்)
பெரும்பாலான fresherகளுக்கு உள்ள பிரச்சனை எங்கு ஆரம்பிப்பது என்பதுதான். Industrial requirementக்கும் Educational instituteக்கும் இடையே உள்ள gape தான் பிரச்சனையே.
மாடல் பேப்பர்கள் பெரும்பாலும் இணைய தளங்களில் கிடைப்பது ஆறுதல் அளித்தாலும், மாணவர்கள் அதை தேடிக் கண்டுபிடிப்பதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
தேவையான சில தகவல்களை தொகுத்து தருவது மிகுந்த பயனளிக்கும் என்பதால் இப்பகுதியை ஆரம்பித்துள்ளோம். தங்களிடம் உள்ள தகவல்களை எங்களுக்கு அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன், இவ்வலைப்பூவில் பிரசுரிக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றோம்.
அனுப்பவேண்டிய முகவரி nascleguru@gmail.com
சுருங்கச் சொன்னால் சீனியரிகளான நாம் நம் ஜூனியர்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக இதைக் கருதுகிறேன். கல்லூரியின் இறுதியான்டில் நாம் பெற்ற அனுபவங்களை நம் சகோதர சகோதரிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான சிறு முயற்சி இது.
31 Dec
Agora – A Complete SaaS Delivery platform from HCL
Agora – A Complete SaaS Delivery platform from HCL
எங்கும் SaaS (Software As A Service) எதிலும் SaaS என்று இன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்க 2007 இன் தொடக்கத்தில் SaaSசின் Delivery platform ஐ உருவாக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு 2008 இன் முதல் காலண்டில் வெற்றிகரமாக வெளியிட்டது ஹெச்சிஎல் (HCL Technologies Ltd) நிறுவனம். Agora என பெயரிடப்பட்ட SaaS Delivery platformஆன இது Web 2.0 மற்றும் Ajax தொழில்நுட்பத்தால் ஒரு மகத்தான (Rich User interface) UI யை கொண்டுள்ளது இதன் சிற்ப்பம்சமாகும்.
பல முன்னனி நிறுவங்களே இதன் முக்கியத்துவத்தை அறிந்திராத நிலையில் ஒரு Service based கம்பெனியில் IP project
ஆக ஆரம்பித்த ஒன்று இவ்வளவு வெற்றி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதன் பின்னனில் உள்ளவர்களின் உழைப்பை நாம் சாதாரனமாக மதிப்பிடமுடியாது.
மிக வேகமாக வளர்ந்துவரும் (fastest growth companies) முதல் 60 கம்பெனிகள் பெரும்பாலும் SaaSஐ சார்ந்துள்ளன என்பதிலிருந்து சந்தை நிலவரம் மற்றும் வருவாய் வளர்ச்சி தெரியவருகிறது. இது அடுத்த வருடம் SaaS மேலும் 17% சதவீதம் வளர்ச்சி பெரும் என்பது குறிப்படத்தக்கது.
| Surging 60: 40 Fastest-Growing Software Companies (1-20)* | |||||
| Rank | Company | Sales Growth, 2007 VS. 2006 | Revenue, Most Recent 4 QTRS | Net Profit, Most Recent 4 QTRS | Profit Change in 2007 |
| 1 | VMWARE | 88.4% | $1,325,811,000 | $218,137,000 | 154.0% |
| 2 | 56.4% | $16,593,000,000 | $4,204,000,000 | 36.6% | |
| 3 | SALESFORCE.COM | 50.6% | $748,700,000 | $18,356,000 | 3716.2% |
| 4 | NUANCE COMMUNICATIONS | 48.8% | $664,000,000 | $(28,000,000) | Not applicable |
| 5 | ANSYS | 45.8% | $385,000,000 | $82,000,000 | 485.7% |
| 6 | LAWSON SOFTWARE | 44.6% | $810,068,000 | $7,668,000 | Not applicable |
| 7 | REALNETWORKS | 43.8% | $568,000,000 | $48,000,000 | -66.9% |
| 8 | SAPIENT | 34.7% | $524,411,000 | $4,939,000 | -56.2% |
| 9 | SECURE COMPUTING | 34.6% | $237,905,000 | $(35,056,000) | Not applicable |
| 10 | BLACKBAUD | 34.6% | $257,000,000 | $31,000,000 | 3.3% |
| 11 | JDA SOFTWARE GROUP | 34.5% | $374,000,000 | $27,000,000 | 5953.8% |
| 12 | RED HAT | 33.6% | $492,264,000 | $75,065,000 | 12.5% |
| 13 | BLACKBOARD | 31.1% | $240,000,000 | $13,000,000 | Not applicable |
| 14 | TRIZETTO GROUP | 29.9% | $452,000,000 | $28,000,000 | 86.7% |
| 15 | MICROSOFT | 25.7% | $57,898,000,000 | $16,957,000,000 | 42.4% |
| 16 | ORACLE | 24.9% | $20,084,000,000 | $4,780,000,000 | 29.1% |
| 17 | CITRIX SYSTEMS | 22.8% | $1,392,000,000 | $215,000,000 | 17.5% |
| 18 | ADOBE SYSTEMS | 22.6% | $3,157,881,000 | $723,807,000 | 43.1% |
| 19 | DELTEK | 21.9% | $278,246,000 | $22,519,000 | 47.2% |
| 20 | INFORMATICA | 20.3% | $391,000,000 | $55,000,000 | 52.8% |
| *Includes companies that had at least $150 million in revenue entering into 2007 Not applicable = company had a net loss in either its most recent four-quarter period or the previous four-quarter period. Note: Numbers in red and in parentheses show net losses Source: Company filings, Yahoo Finance |
|||||
பெரும்பாலான் SaaS மாடல்கள் ஓப்பன் சோர்ஸ்சை பயன்படுத்துவதால் third party லைசென்சு செலவு இல்லையென்பதால் மேலும் வருவாய் அதிகரிக்கின்றது என்பது கூடுதலான விஷயம்.
இந்திய மென்பொருள் கம்பெனிகள் service based company என்ற நிலையிலிருந்து product companyயாக மாறி வருவதையும், தகவல் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோக்கி செல்வதையும் இது தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. பல மைல்கள் பயனப்பட வேண்டியிருப்பினும் இம்மாதிரியான மாற்று முயற்சிகள் சிறு வெளிச்சத்தை காட்டுகின்றது.
மேலும் தகவல்களுக்கு
SaaS Model : Revenue and Growth Forecast
HCL delivers SaaS platform Agora
AGORA Enables ISVs and Service Providers to Launch SaaS in Six Weeks
-நேஷ்கில் குரு (Nascle Guru)
17 Nov
பேஜ் ரெஃப்ரெஸிங் (page Refereshing)
பேஜ் ரெஃப்ரெஸிங் (page Refereshing) என்பது என்ன?
ஒரு வலைப் பக்கத்தில்(web page) உள்ள ஏதாவது ஒரு இனணப்போ(link) அல்லது பொத்தானையோ (button) கிளிக் செய்யும் போது அவ்வலைப்பக்கம் சில தகவல்களை வெப் சர்வருக்கு(web server) போஸ்ட் செய்யும். இதனை ரெக்வெஸ்ட் (Request) என்கிறோம். பின் வெப் சர்வரில் இருந்து புதிதான பக்கம் வரும். இதனை ரெஸ்பான்ஸ்(Response) என்கிறோம். இந்த ரெக்வெஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸின் போது பழைய வலைப்பக்கம் முழுமையும் மறைந்து புதுப்பக்கம் தோன்றினால் அதனை ஃபுல் பேஜ் ரெஃப்ரஸிங் (full page refereshing) என்கிறோம்.
அஜேக்ஸ் முறை: (AJAX method)
உதாரணமாக, மெயில் கணக்கும் துவங்கும் வலைப்பக்கத்தில், நமக்கு தேவையான மெயில் ஐடி யாரும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய ஒரு பட்டனை(Verifiy the availabity.) வைத்திருப்பார்கள். அதனை அழுத்தும்போது, அது மெயில் ஐடியை மட்டும் சர்வருக்கு அனுப்பும், ரெஸ்பான்ஸ் ஆனது பட்டனுக்கு கீழேயே தெரியும்படி வைத்திருப்பார்கள்.
ஃபுல் பேஜ் ரெஃப்ரெஸிங் முறை: (Full page Refereshing method)
இதுவே பழைய முறையில், உங்களின் பெயர், கடவுச் சொல் (password) போன்ற தேவையற்ற விவரங்களையும் சர்வருக்கு அனுப்ப வேண்டி இருந்தது, பின் மீண்டும் அதே தகவலை புதுப்பக்கதில் காண்பிக்க வேண்டியிருந்தது.
-நேஷ்கில் குரு
7 Oct
அஜெக்ஸ் (AJAX) என்பது என்ன?
Asynchronous JavaScript and XML என்பதன் சுருக்கமே AJAX ஆகும்.
AJAX என்பது ஒரு JAVA, C போன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள் மொழி என்பதுதான் பொதுவான மற்றும் தவறான கருத்து.
AJAX என்பது ஏற்கனவே நாம் பழக்கப்பட்ட, பயன்படுத்திய Java Script தான். அப்படியெனில் ஜாவா ஸ்கிரிப்டுக்கும் AJAXக்கும் என்ன வேறுபாடு.
பொதுவாக Client Side validation செய்வதற்கு மட்டுமே Java Scriptயை பயன்படுத்தினார்கள். அதையே Server Side validation செய்வதற்கும் பயன்படுத்தினால் அதுதான் AJAX. இதில் விஷேசம் என்னவெனில் Server call ஆனது பின்னனியில்(Asynchronous & background call) நடைபெறுவதால் page refereshing இருக்காது.
AJAX பயன்படுத்துவதில் உள்ள பயன்கள்:
1. முழு பக்கமும் refresh ஆகாது.
2. Asynchronous call to server என்பதாலும், தேவையான ஒரு பகுதியை மட்டுமே சர்வருக்கு அனுப்புதால் வேகம் அதிகரிக்கும் மற்றும் குறைவான நெட்வொர்க் டிராபிக்.
XMLHttpRequest – என்ற Protocol தான் Asynchronous call மேற்கொள்ள உதவுகிறது.
-நேஷ்கில் குரு
6 Oct
நேஷ்கில் குரு
“நீரின்றி அமையாது உலகு” என்பது போய் கணிணியின்றி அமையாது உலகு என்பது வழக்காகிவிடும் போல் உள்ளது கணிணிதுறையின் வளர்ச்சி.
கணிணிதுறை சார்ந்த தகவல்களின் தேவை அதிகத்துக்கொண்டே இருக்கின்றது இத்தேவைகளை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் நேஷ்கில் குரு.
எளிய தமிழில் கணிணிதுறை தகவல்கள், சிறிய ப்ரோகிராம்கள், விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், போன்றவற்றை தொகுத்தளிப்பதே இதன் பணியாகும். ஆங்கிலத்தில் அளவற்ற தகவல்கள் இருப்பினும் தமிழில் தகவல்களை கொடுப்பதன் நோக்கம் தாய் மொழியின் வழியாக மாணவர்கள் கற்க உதவுவதும், கணிணி மற்றும் இணையத்தில் தமிழில் அறிவியலை பலப்படுத்துவதும் ஆகும்.
தங்களது மேலான் கருத்துக்களுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி!
-நேஷ்கில் குரு

பின்னூட்ட்ங்கள்