பேஜ் ரெஃப்ரெஸிங் (page Refereshing) என்பது என்ன?
ஒரு வலைப் பக்கத்தில்(web page) உள்ள ஏதாவது ஒரு இனணப்போ(link) அல்லது பொத்தானையோ (button) கிளிக் செய்யும் போது அவ்வலைப்பக்கம் சில தகவல்களை வெப் சர்வருக்கு(web server) போஸ்ட் செய்யும். இதனை ரெக்வெஸ்ட் (Request) என்கிறோம். பின் வெப் சர்வரில் இருந்து புதிதான பக்கம் வரும். இதனை ரெஸ்பான்ஸ்(Response) என்கிறோம். இந்த ரெக்வெஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸின் போது பழைய வலைப்பக்கம் முழுமையும் மறைந்து புதுப்பக்கம் தோன்றினால் அதனை ஃபுல் பேஜ் ரெஃப்ரஸிங் (full page refereshing) என்கிறோம்.
அஜேக்ஸ் முறை: (AJAX method)
உதாரணமாக, மெயில் கணக்கும் துவங்கும் வலைப்பக்கத்தில், நமக்கு தேவையான மெயில் ஐடி யாரும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய ஒரு பட்டனை(Verifiy the availabity.) வைத்திருப்பார்கள். அதனை அழுத்தும்போது, அது மெயில் ஐடியை மட்டும் சர்வருக்கு அனுப்பும், ரெஸ்பான்ஸ் ஆனது பட்டனுக்கு கீழேயே தெரியும்படி வைத்திருப்பார்கள்.
ஃபுல் பேஜ் ரெஃப்ரெஸிங் முறை: (Full page Refereshing method)
இதுவே பழைய முறையில், உங்களின் பெயர், கடவுச் சொல் (password) போன்ற தேவையற்ற விவரங்களையும் சர்வருக்கு அனுப்ப வேண்டி இருந்தது, பின் மீண்டும் அதே தகவலை புதுப்பக்கதில் காண்பிக்க வேண்டியிருந்தது.
-நேஷ்கில் குரு
Posted by பூங்குன்றன் on November 17, 2009 at 3:51 pm
ஆஹா … நம்ம ஏரியா…… நிறைய எழுதுங்கள்
Posted by ..:: Mãstän ::.. on November 17, 2009 at 5:58 pm
நல்ல தகவல்.
தயவு செய்து அதிகமாக எழுதவும்.
Posted by nascle on November 17, 2009 at 10:56 pm
// பூங்குன்றன், ..:: Mãstän ::..//
நேரம் சிறு பொருட்டாக உள்ளது. என்னால் முயன்ற அளவு முயல்கிறேன். தங்களின் ஊக்குவிப்பிற்கு நன்றிகள் பல.
-nascle guru