சாப்வேர் இன்ஞினியர், லீட் என்ஞியர், ப்ராஜெக்ட் லீட், ப்ராஜெக்ட் மேனேஜர், ஜெனரல் மேனேஜர், வைஸ் பிரசிடென்ட், பிரசிடென்ட், சிஈஓ என எந்த பதவிகளில் இருப்பவராயினும் ஒரு காலத்தில் அவர்களும் ஃப்ரெஸ்சர் ஆக இருந்தவர்கள்தான் (இதை தான் தமிழ் சமூகம் மாமியாரே நீங்களும் ஒரு மருமகள்தான் என்று சொல்கிறது) இதையே ஆங்கிலத்தில் என்கிறார்கள்.தமிழ், ஆங்கிலம் என எதில் சொன்னாலும் விஷயம் ஒன்றுதான் என்றாலும், இங்கிலீசில் இரண்டு வார்த்தையை போடுவது ஒரு கெத்துக்காகத்தான்)
பெரும்பாலான fresherகளுக்கு உள்ள பிரச்சனை எங்கு ஆரம்பிப்பது என்பதுதான். Industrial requirementக்கும் Educational instituteக்கும் இடையே உள்ள gape தான் பிரச்சனையே.
மாடல் பேப்பர்கள் பெரும்பாலும் இணைய தளங்களில் கிடைப்பது ஆறுதல் அளித்தாலும், மாணவர்கள் அதை தேடிக் கண்டுபிடிப்பதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றது.
தேவையான சில தகவல்களை தொகுத்து தருவது மிகுந்த பயனளிக்கும் என்பதால் இப்பகுதியை ஆரம்பித்துள்ளோம். தங்களிடம் உள்ள தகவல்களை எங்களுக்கு அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன், இவ்வலைப்பூவில் பிரசுரிக்கப்படும் என்பதை தெரிவிக்கின்றோம்.
அனுப்பவேண்டிய முகவரி nascleguru@gmail.com
சுருங்கச் சொன்னால் சீனியரிகளான நாம் நம் ஜூனியர்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக இதைக் கருதுகிறேன். கல்லூரியின் இறுதியான்டில் நாம் பெற்ற அனுபவங்களை நம் சகோதர சகோதரிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான சிறு முயற்சி இது.